இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் தலைமையில், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் கௌரவப் பணிப்பாளர் ராஜகீய பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை உட்பட அரச வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்களை அடையாளமாக விநியோகிக்கும் நிகழ்வு 2023 ஜூலை 17 ஆம் திகதி வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்படி, இந்த சமூகப் பணித் திட்டத்தின் கீழ், இலங்கை வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை உள்ளிட்ட கடற்படை வைத்தியசாலைகளுக்கு பெருமளவான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இதனை அடையாளப்படுத்தும் வகையில் 2023 ஜூலை 17 ஆம் திகதி வெலிசறை கடற்படை பொது வைத்தியசாலைக்கு மற்றும் கடற்படை தாதியர் பயிற்சி பாடசாலைக்கு அன்பளிப்பாக இரண்டு (02) வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை வைத்தியசாலைச் சபையின் கௌரவப் பணிப்பாளர் ராஜகீய பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் தலைமையில் முன்னெடுக்கப்படும் இச் சமூகப் பணித் திட்டத்தைப் பாராட்டியதுடன், இத்திட்டம் சுகாதாரத் துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் எனத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி, இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன், நாட்டின் சுகாதார துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதாகவும், அதற்கான பங்களிப்பை கடற்படை தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா மற்றும் கடற்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜானக மாரம்பே உட்பட சுகாதார அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.