புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று (2023 ஜூலை 13) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா அவர்களால் கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்ட பின்னர், கடற்படையின் பாரம்பரிய மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர், கடற்படைத் தளபதி புதிய விமானப்படைத் தளபதிக்கு கடற்படைத் துனை தளபதி உள்ளிட்ட மேலாண்மை வாரியத்தை அறிமுகப்படுத்தினார்.
2023 ஜூன் 30 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர், கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி புதிய விமானப்படைத் தளபதியின் எதிர்கால கடமைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறப்பட்டன.