உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றும் Vinod Kurain Jacob அவர்கள் இன்று (2023 ஜூலை 12) உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

இதன்படி, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் Vinod Kurain Jacob அவர்களை கடற்படைத் தலைமையகத்திற்குப் வரவேற்கப்பட்ட பின்னர், கடற்படைத் தளபதி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.

அத்துடன், இலங்கையில் இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய காலத்தில் அவர் வழங்கிய ஆதரவிற்கு கடற்படைத் தளபதி நன்றி தெரிவித்ததுடன் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.