இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது சப்தர் கான் (Colonel Muhammad Safdar Khan) இன்று (06 ஜூலை 2023) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ பிரியாவிடை சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

இதன்படி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் முஹம்மது சப்தர் கானை கடற்படைத் தளபதி கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்ற பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்துடன், இலங்கையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய காலத்தில் அவர் வழங்கிய ஆதரவிற்காக கடற்படைத் தளபதி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.