இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டம் மூலம் "கதிர்காமம் பாத யாத்திரை"க்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டன

2023 ஜூன் 10ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற கதிர்காமம் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக இலங்கை கடற்படை சமூக நலத்திட்டத்தின் கீழ் யால லிங் துண பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டதுடன் பக்தர்களின் குடி நீர் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவின் மேற்பார்வையின் கீழ், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது. கதிர்காம பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், யாத்திரையில் கலந்து கொண்ட 27,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு 60,000 லீற்றருக்கும் அதிகமான தண்ணீர் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டது.

மேலும், கடற்படையின் இந்த சமூக நலத்திட்டம் பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பக்தர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.