கடற்படை சேவைகளின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இன்று (2023 ஜூலை 04) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
ரியர் அட்மிரல் பிரியால் விதானகே அவர்கள் பணிப்பாளர் நாயகமாக சேவைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
இதேவேளை, பதில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய கொமடோர் சஞ்சீவ பெரேரா, ரியர் அட்மிரல் பிரியால் விதானகேவிடம் நியமனத்திற்கான கடமைகளையும் பொறுப்புகளையும் கையளித்தார்.