நிரந்தரமாக ஊனமுற்ற ஓய்வுபெற்ற சிரெஷ்ட மாலுமிக்கு கடற்படையால் மின்சார சக்கர நாற்காலியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

குறிப்பிட்ட உடல்நிலை காரணமாக முற்றாக ஊனமுற்ற சிரேஷ்ட மாலுமி எம்.யு.எல். ஜயரத்னவுக்கு (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 ஜூலை 03 ஆம் திகதி கடற்படையால் வடிவமைக்கப்பட்ட மின்சார சக்கர நாற்காலியொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு எல்பிட்டிய பகுதியில் உள்ள மூத்த மாலுமியின் வீட்டில் இடம்பெற்றது.

முற்றுமுழுதாக ஊனமுற்ற அவரது நிலையைத் தணிக்க மின்சார சக்கர நாற்காலியைப் பெற்றுத் தருமாறு கடற்படை நலன்புரித் திணைக்களத்திடம் சிரேஷ்ட மாலுமி எம்.யு.எல். ஜயரத்ன (ஓய்வு) கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, கடற்படை நலன்புரி திணைக்களத்தின் நிதி பங்களிப்பு மற்றும் கடற்படை மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் திணைக்களத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன், கடற்படை தளபதியின் தலைமையில் சிரேஷ்ட மாலுமிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மின்சார சக்கர நாற்காலி சிரேஷ்ட மாலுமிக்கு 2023 ஜூலை 03 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், சிரேஷ்ட அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த கமகே (ஓய்வு பெற்ற) உட்பட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.