கடற்படை மூலம் சதுப்புநில கன்றுகள் நடவு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தலைமையில், ஆயிரம் (1000) சதுப்புநில மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியொன்று லங்காபடுன உல்லுக்கலை களப்பு பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடற்படையின் சதுப்புநில பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கடற்படை அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி ஆறுகள், முகத்துவாரங்கள் மற்றும் தடாகங்களை அண்மித்த பகுதிகளில் சதுப்பு நிலங்களை நடவு செய்து வருகிறது. இதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் லங்காபடுன நிறுவகத்தினால் இந்த ஆயிரம் (1000) சதுப்புநில மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் உள்ளுக்கலை களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
சதுப்புநில சூழல் கடலோர சுற்றுச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இந்நிகழ்வில் கடற்படை கட்டளைத் தளபதி (திரிகோணமலை தெற்கு) கொமடோர் அசங்க ரதுகமகே உட்பட கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.