சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு வருகை

2023 ஜூன் மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொன்டுள்ள சீன மக்கள் குடியரசு தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மேஜர் ஜெனரல் Zhang Changsheng தலைமையிலான ஐம்பத்தாறு (56) அதிகாரிகள் கொண்ட குழு 2023 ஜூன் 23 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளதுடன் அங்கு குறித்த குழுவின் தலைவருக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேஜர் ஜெனரல் Zhang Changsheng மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் நினைவு சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது இலங்கை கடற்படையின் பிரதிப் பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்கு மற்றும் பணி, நிறுவன கட்டமைப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தார்.