ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டுள்ளது
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 22 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்து இன்று (2023 ஜூன் 23) தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்படையினர் புறப்படும் ‘IKAZUCHI (DD-107) கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு இணங்க பிரியாவிடை வழங்கினர்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ‘IKAZUCHI (DD-107)’ கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் TANAKA Hiroaki மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றதுடன் குறித்த கப்பலின் கடற்படையினர் கொழும்பில் முக்கியமான இடங்களையும் பார்வையிட்டனர்.
வெளிநாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய உத்தியோகபூர்வ விஜயங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த பெரிதும் உதவும்.