ரியர் அட்மிரல் விஜித மாரப்பன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் விஜித மாரப்பன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இருந்து இன்று (2023 ஜூன் 23) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் விஜித மாரப்பனவுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் விஜித மாரப்பன 1990 ஆம் ஆண்ட்டில் 20வது உள்வாங்கலின் கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் சேர்ந்தார். அவர், தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது கடற்படை தளபதியின் செயலாளர், கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் துறை (வடக்கு), கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் துறை (தெற்கு), துணை இயக்குனர் சம்பளம், கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் துறை (வட மத்திய), கேப்டன் வழங்கல் மற்றும் சேவைகள் துறை (வடமேற்கு), இயக்குனர் வழங்கல் மற்றும் நிர்வாக அதிகாரி, ஜனாதிபதி இல்லம், கடற்படைத் தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படை செயலாளர், இயக்குனர் கடற்படை வரவு செலவு மற்றும் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி ஆகிய பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.