ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘IKAZUCHI (DD-107)’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'IKAZUCHI (DD-107)' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 150.5 மீற்றர் நீளமும், மொத்தம் 207 கடற்படையினர் கொண்ட ‘IKAZUCHI (DD-107)’ என்ற Destroyer வகையின் போர்க்கப்பலில் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் TANAKA Hiroaki பணியாற்றிகிரார். கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (2023 ஜூன் 22) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும், 'IKAZUCHI (DD-107)' என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, அதன் கடற்படையினர் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் கப்பல் 2023 ஜூன் 23 அன்று தீவை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.