இந்திய கடற்படையின் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலில் கடற்படையினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து யோகா நிகழ்ச்சியொன்றை நடத்தினர்
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய கடற்படையின் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இணைந்து சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (2023 ஜூன் 21) சிறப்பு யோகா நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தன. குறித்த நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.
அதன்படி, 9வது சர்வதேச யோகா தினமான இன்று (2023 ஜூன் 21) இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சிக்கு, ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினரும், மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா உட்பட சிரேஷ்ட, இளைய அதிகாரிகள் மற்றும் கடற்படையினர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.