ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க தனது புகழ்பெற்ற கடற்படை வாழ்க்கைக்கு இன்று (2023 ஜூன் 21) விடைபெற்றார்.

இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓய்வுபெறும் அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையிலான முகாமைத்துவ சபையினர் தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் ரஞ்சன் மெதகொடவுக்கு கடற்படை மரபுகளுடன் துல்லியமாக மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கமான நிகழ்வு முடிந்ததும், சக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் ஓய்வு பெறும் மூத்த அதிகாரிக்கு முறையான பிரியாவிடை அளித்தனர்.

ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க 1989 ஆம் ஆண்ட்டில் 19வது உள்வாங்கலின் கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் சேர்ந்தார். அவர், தனது 33 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது இலங்கை கடற்படையின் பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் தளபதியாக கடமையாற்றியுள்ளார். மேலும், கேப்டன் செயல்பாட்டுத் திணைக்களம் (தெற்கு), சிரேஷ்ட பணியாளர் பாதுகாப்பு அதிகாரி (கிழக்கு), செயற்படும் கடற்படைப் புலனாய்வுப் பணிப்பாளர், வடக்கு கடற்படைக் கட்டளையின் கட்டளை அதிகாரி (தீவுகள்), செயற்படும் கடற்படைக் கட்டளை அதிகாரி (பூனேவ), இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி, கொமடோர் கடல் பயிற்சிகள், துணைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி (திருகோணமலை), பிரதி பணிப்பாளர் நாயகம் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம், பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் மற்றும் வட மத்திய கடற்படைப் பகுதியின் கட்டளைத் தளபதி ஆகிய பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளில் பணியாற்றினார்.