பிரான்ஸ் கடற்படையின் ‘Dupuy de Lôme’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான ‘Dupuy de Lôme’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த்துடன் இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 102.40 மீற்றர் நீளமும், மொத்தம் 107 கடற்படையினர் கொண்ட Electromagnetic Research Vessel வகையின் ‘Dupuy de Lôme’ போர்க்கப்பலில் கட்டளை அதிகாரியாக Commander Augustin Blanchet பணியாற்றிகிரார்.

மேலும், ‘Dupuy de Lôme’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, குறித்த கப்பலின் கடற்படையினர் முக்கிய இடங்களைப் பார்வையிட மற்றும் பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது, மேலும், ‘Dupuy de Lôme’ கப்பல் 2023 ஜூன் 27 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட உள்ளது.