கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படை ஆதரவு
யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் தொடங்கினர். அதன்படி, குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓய வரையிலான பகுதியில் செல்லும் யாத்திரிகர்களின் தேவைகள் குறித்து கடற்படையினர் உதவி வழங்கினர். இதற்கிடையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பக்தர்களின் வசதிக்காக கடற்படையால் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டதுடன், ஜூன் 15 ஆம் திகதி கதிர்காமம் செல்லும் பாத யாத்திரையில் இணைந்தார்.
இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின் பேரில், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓய வரையிலான பகுதியில் பக்தர்களுக்கான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் உணவு உட்பட ஏனைய அத்தியாவசிய வசதிகளை வழங்குவது தென்கிழக்கு கடற்படை கட்டளையால் பிரதேசத்தில் உள்ள ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
பக்தர்களுக்கு கடற்படையினர் வழங்கிய வசதிகள் மற்றும் சேவைகளை அவதானித்த கடற்படைத் தளபதி ஒகந்தவில் உள்ள கதிர்காமம் ஆலயத்துக்குச் சென்று சமய வழிபாடுகளை மேற்கொண்டு பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். அதன் பின்னர் கதிர்காமத்தை சென்றடைந்த கடற்படை தளபதி கதிர்காமம் கிரிவெஹரவில் சமய வழிபாடுகளை மேற்கொண்டார்.
மேலும், இந் நிகழ்வில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு), தென்கிழக்கு கடற்படை கட்டளையின் முன்னாள் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, தற்போதைய தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன போன்ற சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 2023 ஜூன் மாதம் 27 ஆம் திகதி பாத யாத்திரை நிறைவடையும் வரை அதில் பங்குபற்றவுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.