இந்திய கடற்படையின் ‘INS Vagir’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 67.5 மீற்றர் நீளமும், மொத்தம் 60 கடற்படையினர் கொண்ட ‘INS Vagir’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் கட்டளை அதிகாரியாக கமாண்டர் திவாகர் எஸ் (Commander Divakar S) பணியாற்றுகிரார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் 'INS Vagir' நீர்மூழ்கிக் கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் பங்கேற்க உள்ளனர். 'INS Vagir' என்ற நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றுக்காக இலங்கை கடற்படையின் ஒரு குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், ‘INS Vagir’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படையினர் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு 'INS Vagir' என்ற நீர்மூழ்கிக் கப்பல் 2023 ஜூன் 22 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட உள்ளது.