பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS TIPPU SULTAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 134.1 மீற்றர் நீளமும், மொத்தம் 168 கடற்படையினர் கொண்ட ‘PNS TIPPU SULTAN’ என்ற போர்க்கப்பலில் கட்டளை அதிகாரியாக கேப்டன் JAWWAD HUSSAIN TI பணியாற்றுகிரார்.
மேலும், 'PNS TIPPU SULTAN' என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அதன் முழு கடற்படையினர் பங்கேற்கவும், பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று, இலங்கை கடற்படை உறுப்பினர்களுக்கு இந்தக் கப்பலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் அங்கு கப்பலின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், ‘PNS TIPPU SULTAN’ கப்பல் 2023 ஜூன் 20 அன்று தீவை விட்டு புறப்பட உள்ளதுடன் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.