கல்வியில் சிறந்து விளங்கிய கடற்படை அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்திடமிருந்து விருதுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கல்விப் பாடநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய இரண்டு அதிகாரிகளுக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் சான்றிதழ்கள் மற்றும் பலகைகள் வழங்கி வைப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் மற்றும் பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தற்போதைய தலைவர் கொமடோர் ரவீந்திர திசேராவின் தலைமையில் 2023 ஜூன் 10 ஆம் திகதி கொழும்பு இலங்கை தொழில்சார் நிபுணத்துவ சங்கங்களின் நிறுவன அலுவலக வளாகத்தில் (Organization of Professional Associations of Sri Lanka) இடம்பெற்றது.

பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளை 2017 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையின் கல்விப் பாடநெறிகளில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு அவர்களின் தொழில்சார் முன்னேற்றத்திற்காக விருதுகள் மற்றும் பலகைகளை வழங்க ஆரம்பித்துள்ளது.

அதன்படி, திருகோணமலை, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 2022/2023 நீண்ட சமிக்ஞை பாடநெறியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளான லெப்டினன்ட் கே.டீ.சீ.வீ ரணசிங்க மற்றும் லெப்டினன்ட் எம்.ஏ.டீ.சீ பெரேரா ஆகியோருக்கு பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளை 2022/2023 ஆம் ஆண்டிற்கான சான்றிதழ்கள் மற்றும் பலகைகளை இவ்வாரு 2023 ஜூன் மாதம் 10 ஆம் திகதி வழங்கியது.

மேலும், இந் நிகழ்வுக்காக பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாகப் பணிபுரியும் கடற்படை பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படை பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க மற்றும் பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் செயற்குழு உறுப்பினரும் தற்போதைய செயலாளருமான கடற்படையின் பிரதிப் பயிற்சிப் பணிப்பாளர் கப்டன் புத்திக ஜயவீர உட்பட பிரித்தானிய கடற்படை நிறுவகத்தின் இலங்கைக் கிளையின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.