இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் அவிஹாய் சஃப்ரானி Avihay Zafrany கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஜூன் 05) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
கர்னல் Avihay Zafrany இந்தியாவில் புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துடன் இணைக்கப்பட்டு, இலங்கையில் இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றுகிறார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படை தளபதி மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.