வெற்றிகரமான கூட்டு கடற்படைப் பயிற்சிக்குப் பிறகு ‘PNS SHAHJAHAN’ கப்பல் தீவை விட்டுச் சென்றது
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 ஜூன் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS SHAHJAHAN' வெற்றிகரமாக உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாகுவுடன் நடத்தப்பட்ட கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் 2023 ஜூன் 04, அன்று தீவை விட்டு வெளியேறியது. இதேவேளை, கப்பலுக்கு கடற்படையினரின் பாரம்பரிய பிரியாவிடை நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் (PASSEX), கப்பல்களின் வடிவங்களில் நகர்வது, கப்பல்களுக்கு இடையே செய்தி பரிமாற்றம் போன்ற கடற்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதை செலுத்திய பிறகு பயிற்சி முடிவுக்கு வந்தது.
'PNS SHAHJAHAN' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாட்டு கடற்படையினரிடையே நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டியில் அதன் கடற்படையினரும் கலந்து கொண்டனர். மெலும் கப்பலின் செயல்பாட்டு செயல்திறனைக் கவனிக்கும் வாய்ப்பும் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டது.
பிராந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும், மேலும் கடற்படை கப்பல்களின் வருகைகளுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்கள். எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பாரம்பரியமற்ற கடல் அச்சுறுத்தல்கள் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.