இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள், பிரியாவிடை மற்றும் அறிமுகத்திற்கான உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் Colonel Paul Clayton மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள Colonel Darren Woods ஆகியோர் உத்தியோகபூர்வ பிரியாவிடை மற்றும் அறிமுக சந்திப்புக்காக இன்று (2023 ஜூன் 01), கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தனர்.
இதன்படி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஆலோசகர்களை கடற்படைத் தளபதி கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய காலப்பகுதியில் Colonel Paul Clayton வழங்கிய ஆதரவிற்கு கடற்படைத் தளபதி தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.