இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான, சிரேஷ்ட கேர்ணல் Zhou Bo அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 மே 17) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. assets/images/news/event_news/front_img/202305172100.jpg