திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 32வது இளநிலை கடற்படைப் பணியாளர் பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 32வது இளநிலை கடற்படைப் பணியாளர் பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023 மே 11 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் தலைமையில் அட்மிரல் வசந்த கரண்னாகொட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 18 வாரங்களாக இடம்பெற்ற இந்த பாடநெறியின் போது, மாணவ அதிகாரிகளுக்கு தொழில்முறை பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் 32 வது இளநிலை கடற்படைப் பணியாளர் பாடநெறிக்காக இலங்கை விமானப்படையின் ஒரு அதிகாரி உட்பட பதினெட்டு (18) மாணவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்படி, 32 வது இளநிலை கடற்படைப் பணியாளர் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வருகைதந்த ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, இளநிலை கடற்படைப் பணியாளர் பாடநெறியை பயின்ற மாணவ அதிகாரிகளை பாராட்டினார்.

மேலும், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் புத்திக லியனகமகே, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கடற்படை வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.