250 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 388 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 250 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் முந்நூற்று நாற்பத்தைந்து (345) கடற்படை வீரர்கள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நாற்பத்து மூன்று (43) கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2023 மே 13 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் தளபதியும் கட்டளை அதிகாரியுமான கேப்டன் மஞ்சுல ஹேவாபெட்டகேவின் அழைப்பின் பேரில் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் அவரால் வழங்கப்பட்டன.
இதன்படி, 250 ஆவது ஆட்சேர்ப்பின் சிறந்த கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணமும், அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணமும் கடற்படை வீரர் வை.பி.எம்.டி.சி.ஒய்.பண்டார பெற்றுள்ளதுடன் சிறந்த துப்பக்கியாளருக்கான வெற்றிக்கிண்ணம் கடற்படை வீரர் எச்.டப்.ஏ.கே.டி.விதானாராச்சி பெற்றுள்ளார். மேலும், கே.எம்.ஜி தட்சர சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். இதேவேளை, 250 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’ஜகதா” பிரிவு தெரிவு செய்யப்பட்டது.
இங்கு அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த கடற்படையினரை உரையாற்றிய வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க, முதலில் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தேசத்திற்கு தொழில்முறை கடற்படையின் பங்களிப்பை வழங்குவதற்கு, தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றி, தாய்நாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். திறமையான மற்றும் ஒழுக்கமான மாலுமியாக தாய்நாட்டிற்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடல் வழியாக நாட்டுக்கு ஏற்படும் சவாலை தடுக்கவும், நிலப்பரப்பை விட 27 மடங்கு பெரிய இலங்கையைச் சேர்ந்த தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். இலங்கை கடற்படைக்கு தனித்துவமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட ரியர் அட்மிரல் ஜானக நிஸ்ஸங்க வெளியேறிச் செல்லும் கடற்படையினர் தங்கள் திறமைகளையும் ஒழுக்கத்தையும் நடைமுறையில் பயன்படுத்தி தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றார். எதிர்காலத்தில் அந்த பொறுப்பை நிறைவேற்ற தேசத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் இராணுவப் பணிக்குத் தோள்கொடுக்கும் வகையில் தமது அன்புக்குரிய மகன்களையும் மகள்களையும் கடற்படையினரிடம் ஒப்படைத்த பயிற்சி மாலுமிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரதம அதிதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடற்படை கப்பல் தக்சிலா நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இரண்டு கடற்படை வீர்ர்கள் (02) மற்றும் மூன்று பெண் கடற்படையினர் (03) இங்கு வெளியேறிச் சென்றனர். மேலும், கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் இந்த வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.
இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், கடற்படை தலைமையகத்தின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் மற்றும் வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.