இலங்கையில் பிரான்ஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. Jean - Francois PACTET அவர்கள் உள்ளிட்ட குழுவொன்று 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதுடன், குறித்த தூதரகத்தின் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கும் 2023 ஏப்ரல் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பங்களிப்புடன் 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 28 வரை கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தில் நடைபெறுகின்ற பயிற்சிப் பட்டறையுடன் இணைந்து, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் 2023 ஏப்ரல் 24 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், இந்நிகழ்வில் பிரதி கடற்படைத் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் தூதுக்குழுவினர் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது குறித்த கட்டளையின் தளபதி மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் திருகோணமலை கடற்படைத் மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் புத்திக லியனகமகே ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.