கடற்படையினர் சியத தொலைக்காட்சியுடன் இணைந்து சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களை திருகோணமலை கடற்படை முகாமில் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
சியத தொலைக்காட்சியுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு விழா - 2023' கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் தலைமையில் 2023 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்றது.
2023 ஏப்ரல் 22 ஆம் திகதி புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் கந்தளேயிலிருந்து கடற்படை நிலையம் வரையிலான சைக்கிள் ஓட்டப் பந்தயம் மற்றும் கடற்படை நிலையத்திற்குள் மரதன் ஓட்டப் போட்டிகள் ஆகியவற்றுடன் ஆரம்பமாகியது. இந்த ஆண்டு நிகழ்வு கடற்படை கலாசார குழுவின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் அங்கம் பொர அணியின் அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. அட்மிரல் வசந்த கர்ணாகொட கேட்போர் கூடத்தில் கடற்படை இசைக்குழுவின் இசையுடன் பிரபல பாடகர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்வு நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்த புத்தாண்டு திருவிழாவில், சைக்கிள் ஓட்டுதல், மரத்தன் ஓட்டம், கரண்டியில் எலுமிச்சை பழம் வைத்து ஓடுதல், வழுக்கு மரம் ஏறுதல், யானைக்கு கண் வைத்தல், கனா முட்டி உடைத்தல், சாக்கு தாண்டுதல், கொட்ட மல்யுத்தம், பார்வையற்றவருக்கு உணவளித்தல், கயிறு இழுத்தல், பனிஸ் உண்ணுதல், மாவில் மறைத்து வைத்த பணம் தேடுதல், முட்டை பிடித்தல், தென்னை கிளைகள் நெய்தல், பல்வேறு ஆடை அலங்காரப் போட்டிகள், தேங்காய் நெசவு, பலூன் வெடித்தல், இசை நாற்காலி போட்டி, புத்தாண்டு இளவரசன்/இளவரசி தேர்வு, அத்துடன் கடற்படை சார்ந்த சிறிய படகு கையாளுதல், வேக படகு மற்றும் கடல் நீச்சல் போன்ற போட்டிகள் இடம்பெற்றது. அதற்காக, Voice of Asia Media Network, Dialog Institute, CBL Institute உள்ளிட்ட அனுசரணையாளர்களால் பெறுமதியான நிதிப் பரிசுகள் வழங்கினர். இந்த விளையாட்டுகளில் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அதன்படி, சைக்கிள் பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்றவருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 50,000.00 பெறுமதியான நிதிப் பரிசு கடற்படை வீரர் ஈ.டி.எம்.பி எதிரிசிங்கவினாலும். ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 30,000.00 பெறுமதியான நிதிப் பரிசு கே.எம்.ஜீ.சீ.யூ லக்சிறிவினாலும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றவருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 30,000.00 பெறுமதியான நிதிப் பரிசு கடற்படை வீரர் ஜீ.பீ.எச்.பி தர்மஸ்ரீ வினாலும் கடல் நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றவருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 25,000.00 பெறுமதியான நிதிப் பரிசு மத்திய அதிகாரி கே.என்.டீ பெரேராவினாலும் அதன் பெண் முதலிடத்தைப் பெற்றவருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 25,000.00 பெறுமதியான நிதிப் பரிசு ஆர்.ஆர்.டீ. தில்மி ரத்னாயக்கவும் வென்றனர்.
இலங்கை கடற்படை மற்றும் சியத தொலைக்காட்சி இணைந்து ஏற்பாடு செய்த 'சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு விழா - 2023', வின் புத்தாண்டு இளவரசருக்கு வழங்கும் ரூ. 50,000.00 ரூபாவை கடற்படை வீரர் எம்.டப்.கே.மதுஷன் வென்றதுடன் சமாதி தத்சரணி சேனவிரத்ன புத்தாண்டு இளவரசியாக வெற்றி பெற்று ரூ. 50,000.00 வென்றார்.
இந்நிகழ்வில் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வொயிஸ் ஒப் ஏசியா ஊடக வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.