காலி உரையாடல் 2023 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது

2023 காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2023 ஏப்ரல் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் வெளியிடப்பட்டது.

‘Emerging New Order in the Indian Ocean’ என்ற கருப்பொருளின் கீழ் இலங்கை கடற்படையால் 11 வது முறையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற 2023 காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு 2023 அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளதுடன் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று கடற்படைத் தளபதியால் வெளியிடப்பட்டது.

‘galledialogue.lk’ என்ற இணைய முகவரி (Web address) மூலம் இந்த வலைத்தளத்துக்கு அணுக முடியும், இது மூலம் காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அனைத்து விவரங்களும் உடனடியாக பெற முடியும்.

மேலும் இந்நிகழ்வில் கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, பிரதி கடற்படை பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, கடற்படை தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் கொமடோர் சமிந்த ரணவீர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.