கடற்படை தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான 'நெகதட பெலயக்' மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக, விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நெகதட பெலயக் - தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்துடன்' இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இன்று (2023 ஏப்ரல் 20) காலை 06.38 மணியளவில் கடற்படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றை நட்டார்.
இந்த வருடத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான சுப நேர அட்டவணையில் 'நிலத்திற்கு சுவாசம்' என இடம் பெற்றுள்ள இந்த மரநடுகைச் சடங்குக்காக கடற்படை துனை பிரதானி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, கடற்படை பிரதிப் துனை பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா உட்பட கடற்படை வீரர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் தலைமையில் தென்கிழக்கு கடற்படை கட்டளையில் இதேபோன்ற நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.