இலங்கை கடற்படையின் கடல் ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 97 கடல் ஆமை குஞ்சுகளை கடலுக்கு விடப்பட்டது
இலங்கை கடற்படையின் கடல் ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட தொண்ணூற்றேழு (97) கடல் ஆமைக் குஞ்சுகள் 2023 ஏப்ரல் 11 ஆம் திகதி பானம கடற்கரையில் தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ருவன் ரூபசேனவின் பங்கேற்புடன் கடலில் விடப்பட்டன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கு அமைய, அழிந்து வரும் இந்த கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றும் வகையில் கடற்படை கடல் ஆமைகளை பாதுகாக்கும் திட்டமொன்றை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் கடல் ஆமை முட்டைகளை பாதுகாப்பதையும், குஞ்சுகளை பாதுகாப்பாக கடலுக்கு விடுவதையும் உறுதி செய்கிறது. பானமவில் கடற்படையால் நிர்வகிக்கப்படும் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையத்தைத் தவிர, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில் இலங்கை கடலோரக் காவல்படையினரால் இதுபோன்ற திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிறுவனத்தில் பராமரிக்கப்படும் கடல் ஆமை பாதுகாப்பு மையத்தால் பாதுகாக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் இருந்து வெளிவந்த தொண்ணூற்றேழு (97) ஆமை குஞ்சுகள் இவ்வாரு 2023 ஏப்ரல் 11 ஆம் திகதி கடலில் விடப்பட்டன. இதுவரை 15019 ஆமை குஞ்சுகள் இலங்கை கடற்படை கப்பல் மகாநா நிறுவனத்தின் கடல் ஆமை பாதுகாப்பு மையத்தால் கடலில் விடப்பட்டுள்ளன.