கடல்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் அமெரிக்காவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் இன்று (2023 மார்ச் 27) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக்கொண்டனர். அமெரிக்காவை பிரதிபலித்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அந்தோனி சி நெல்சன் அவர்களால் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவிடம் இந்த உபகரணங்களை அடையாளமாக கையளிக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதரகத்தின் Department of Defence Building Partner Capacity திட்டத்தினால் வழங்கப்பட்ட இந்த உபகரணத் தொகுப்பு, கப்பல்கள் மற்றும் படகுகளுக்குள் நுழைவதைத் தேடுவதற்கும் கைப்பற்றுவதற்கும் இலங்கை கடற்படையின் சிறப்புக் கப்பல் படைப்பிரிவின் நடவடிக்கைகளுக்காகவும் (Visit Board Search & Seizure - VBSS) பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு, கடற்படை சிறப்புப் படகுகள் படைகளின் பணிப்பாளர், கேப்டன் துசித தமிந்த மற்றும் கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.