சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற 01/2023 கூட்டுப் பயிற்சிப் பரிமாற்றப் பாடநெறி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து நடத்திய கூட்டுப் பரிமாற்றப் பயிற்சி 01/2023 (Joint Combined Exchange Training (JCET) Balance Style 01/2023) வெற்றிகரமாக நிறைவுபெற்றதுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24 மார்ச் 2023 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் மகேஷ் டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.

2023 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சி நெறியில் சிறப்புக் படகுகள் படையில் இணைக்கப்பட்ட 24 கடற்படை வீரர்களும், 4 ஆவது விரைவுத் தாக்குதல் படகுகள் படையில் இணைக்கப்பட்ட 12 கடற்படை வீரர்களும் உட்பட இலங்கை கடற்படையின் 36 கடற்படை வீரர்களும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படையின் Alpha 1121 செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த 09 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பாடத்திட்டத்தின் போது, செயல்பாட்டு திட்டமிடல், தந்திரோபாய போர் விபத்து பாதுகாப்பு, போர்க்களத்தில் நெருக்கமான போர் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி போன்ற பயிற்சிகள் நடத்தப்பட்டன, இதன் மூலம் புதிய அறிவு மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இந்த பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட தரப்பினரிடையே நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் 4ஆவது விரைவுப் தாக்குதல் படகுகள் குழுவின் கட்டளை அதிகாரி கப்டன் துசர மகேஷ், விசேட படகுகள் படையின் கட்டளை அதிகாரி கமாண்டர் தர்மசிறி ஹேரத், அமெரிக்க இராணுவ விசேட படையணி அல்பா 1121 நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.