உலக ஊனமுற்றோர் தினத்துடன் இணைந்து கடற்படை சேவா வனிதா பிரிவினால் சமூக சேவை திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது
உலக ஊனமுற்றோர் தினத்துடன் இணைந்து, சேவா வனிதா பிரிவு சமூக சேவை திட்டமொன்றை இன்று (2023 மார்ச் 17) செயல்படுத்தியது, இதன் கீழ் சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்கள் அடையாளமாக கண் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள் மற்றும் சக்கர நாற்காலிகளை கடற்படையில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் அடுத்த உறவினர்களுக்கு வழங்கினார்.
மாலுமிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த உபகரனங்கள் வழங்கப்பட்டதோடு, 50 பெண் மாலுமிகளுக்கு சுகாதாரப் பொருட்களை வழங்கியதன் அடையாளமாக ஐந்து பெண் மாலுமிகளுக்கு இது தொடர்பான பொருட்களும் இரண்டு கர்ப்பிணி பெண் மாலுமிகளுக்கு ‘Go Cart’ களும் கௌரவ தலைவி வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் கௌரவ உப தலைவி திருமதி உதேனி குலரத்ன, சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.