திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் புதிய கட்டளைத் தளபதியாக கொமடோர் புத்திக லியனகமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 37வது கட்டளை அதிகாரியாக கொமடோர் புத்திக லியனகமகே 2023 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார்.
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 37வது கட்டளைத் தளபதியாக பதவியேற்பதுக்கு முன்னர், கொமடோர் புத்திக லியனகமகே கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளராக கடமையாற்றினார். கடற்படை மரபுப்படி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு புதிய கட்டளைத் தளபதியை வரவேற்று, கல்லூரியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கட்டளைத் தளபதியின் கடமைகளை கொமடோர் புத்திக லியனகமகேவிடம் ஒப்படைத்தார்.
மேலும், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ கடற்படை மரபுப்படி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியிலிருந்து பிரியாவிடை பெற்றார்.