கடற்படை மரைன் படையணி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 13 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
கடற்படை மரைன் படையணி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த இந்த படையணியின் எட்டாவது (08) ஆட்சேர்ப்பில் சேர்ந்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஒன்பது (09) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவித்தல் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரொஹான் திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி கடற்படை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் 2023 பெப்ரவரி 27 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.
2016 ஆம் ஆண்டு முதன்முறையாக 164 உறுப்பினர்களுடன் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கடற்படை மரைன் படையணி, தற்போது படிப்படியாக வளர்ந்து இந்த ஆட்சேர்ப்பு உட்பட 08 ஆட்சேர்ப்புகளின் கீழ் 603 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உள்ளடக்கிய ஒரு படைப்பிரிவாக வளர்ந்துள்ளது.
அதன்படி, ஒன்பது (09) மாத கடின பயிற்சிக்காக தன்னார்வத் தொண்டு செய்த 19 கடற்படை வீரர்களின் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட எட்டாவது (08) ஆட்சேர்ப்பின் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு செய்த 13 கடற்படை வீரர்களுக்கு பெருமைமிக்க மரைன் படையணி சின்னத்தை அணிவித்தல் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி கடற்படை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. மேலும், பயிற்சியின் போது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களுக்கு பிரதம அதிதியால் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, எட்டாவது மரைன் படையணி பாடநெறியின் மிகச்சிறந்த கடற்படை உறுப்பினராக லெப்டினன்ட் பி.ஏ.விஜயவிக்ரமவும் அனைத்து பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற உறுப்பினராக லெப்டினன்ட் டப்.ஜி.எஸ்.திமந்தவும், அதிக உடல் தகுதி கொண்ட உறுப்பினராக கடற்படை வீர்ர் என்.எஸ்.ஏ.எஸ்.எம்.செனரத் மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருது கடற்படை வீர்ர் என்.பி. சாலக்கவும் பெற்றுள்ளனர். மேலும், கடற்படை மரைன் படையணியின் திறன்களை ஈர்க்கும் வகையில் இந்த சின்னங்களை அணிவிக்கும் சந்தர்ப்பம் இடம்பெற்றது.
இங்கு, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படை வீரர்களை உரையாற்றிய கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, முதலில் புதிதாக வெளியேறும் கடற்படை வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பயிற்சியின் மூலம் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பங்களிக்க வேண்டும் என்றும், இந்த பயிற்சியைப் பயன்படுத்தி தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தைரியத்துடன் செயல்பட்டு நிலைத்து நிற்க வேண்டும் என்றார். ஒரு அமைதியான சூழ்நிலையிலும் தாய்நாட்டிற்கு எதிரான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் எப்போதும் அறிவையும் பயிற்சியையும் புதுப்பித்து, நிலையான கவனத்துடன் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பயிற்சி நடவடிக்கைகளின் வெற்றிக்கு பங்களித்த கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் திணைக்களத் தலைவர்கள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட அனைத்து ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கும் விசேட பயிற்சி வசதிகள் வழங்கிய சிறப்பு படகுகள் படை, துரித நடவடிக்கை படகுகள் படை, இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் முகவர் நிலையங்க்கைளுக்கு பிரதம அதிதி அங்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் இலங்கை தொண்டர் கடற்படை மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ரஞ்சன் மெதகொட, பணிப்பாளர் மரைன் கொமடோர் சனத் பிடிகல, இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி, கமாண்டர் (மரைன்) சம்பத் தயானந்த உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், இராணுவ மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கலைந்து சென்ற கடற்படை வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.