பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி (Admiral Muhammad Amjad Khan Niazi) இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி இன்று (2023 பிப்ரவரி 25,) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 25, 2023) இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்குள் பிரவேசித்த கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசிக்கு கடற்படை மரபுப்படி முறையான மற்றும் நேர்த்தியான கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது. கடற்படைத் தலைமையகத்தில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி அவர்களைப் வரவேற்கப்பட்ட பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவருக்கு கடற்படை முகாமைத்துவ சபையை அறிமுகப்படுத்தினார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு நாட்டு கடற்படைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு ரீதியாக பாகிஸ்தான் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி நட்புரீதியான கலந்துரையாடலை நடத்திய பின்னர் இந்தச் சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் சின்னங்கள் பரிமாற்றமும் நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாசி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோர் கடற்படை முகாமைத்துவ சபையுடன் குழு புகைப்படமொன்று எடுத்துக்கொண்டதுடன், கடற்படை தளபதி அலுவலகத்தின் விருந்தினர்களின் சிறப்பு நினைவுப் புத்தகத்தில் குறிப்பும் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அவர் கௌரவ ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவம் மற்றும் விமானப்படைத் தளபதிகளைச் சந்தித்து, கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு விஜயம் செய்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். மேலும், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 2023 பிப்ரவரி 28 ஆம் திகதி தீவை விட்டுச் செல்ல உள்ளார்.