இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI Raden Eddy Martadinata - 331' என்ற கடற்படை கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Captain Nopriadi தலைமையில் வருகைதந்த குறித்த கப்பலானது கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.