இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Raden Eddy Martadinata - 331’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI Raden Eddy Martadinata - 331' என்ற கடற்படை கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Captain Nopriadi தலைமையில் வருகைதந்த குறித்த கப்பலானது கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

KRI Raden Eddy Martadinata - 331 பிரிவைச் சேர்ந்த 105.02 மீ நீளமான இந்த கப்பல் 138 கடற்படை பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 2023 பெப்ரவரி 21 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளது.