இந்தோனேசிய கடற்படையின் ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற போர்க்கப்பல் தீவை விட்டு புறப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற போர்க்கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று காலை (2023 பிப்ரவரி 05) தீவை விட்டு புறப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகியோருக்கு இடையில் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றதுடன் மேலும், குறித்த கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்கும் பயணங்களையும் மேற்கொண்டனர்.

அதன்படி உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ‘KRI Raden Eddy Martadinata - (REM - 331)’ என்ற கப்பல் இன்று (2023 பிப்ரவரி 05) காலை தீவை விட்டு புறப்பட்டுள்ளதுடன் கடற்படை மரபுப்படி கப்பலுக்கு விடைபெற்றது.