75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்ச்சி

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியொன்று 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வுக்காக 85 கடற்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நெடுந்தீவு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணம் இரத்த வங்கி மற்றும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் சமூக சேவையை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் தானாக முன்வந்து பங்களித்தனர்.