இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளராக ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை (National Authority for Implementation of the Chemical Weapons Convention - NACWC) நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் பணிப்பாளராக கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவை நியமித்துள்ளார்.

அதன்படி ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க 2023 ஜனவரி 27ஆம் திகதி பத்தரமுல்ல, சுஹுருபாயவில் அமைந்துள்ள இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் அலுவலகத்தில் பணிப்பாளராக பொறுப்பேற்றார், அங்கு அந்த அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் திரு. ஜயந்த எதிரிசிங்க மற்றும் பணிக்குழுவினரால் இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவது குறித்து அபிநவ இயக்குனருக்கு அறிமுக அமர்வொன்று நடத்தப்பட்டது.