அமெரிக்காவின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைக் கட்டளை அதிகாரி மற்றும் கடற்படைத் தளபதி இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைக் கட்டளை அதிகாரி Rear Admiral Joaquin J. Martinez de Pinillos உள்ளிட்ட குழுவினர் இன்று (2023 ஜனவரி 26) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, அமெரிக்காவின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைக் கட்டளை அதிகாரி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், அதனைக் குறிக்கும் வகையில் இரு தரப்புக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றமும் இடம்பெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது அமெரிக்காவின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைக் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Lieutenant Commander Richard Lister உட்பட அமெரிக்காவின் ஏழாவது கப்பல்கள் குழுவின் அதிகாரிகளுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்துரையாடலொன்று கடற்படைத் தலைமையகத்தில் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் நடத்தினார். அங்கு, கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிப்பது உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே கருத்துப் பரிமாற்றப்பட்டது.