CARAT - 2023 பயிற்சியின் கடல் கட்டம் மேற்கு கடற்படைக் கட்டளை கடல் பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது
CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கடல் கட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு, இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் அமெரிக்க கடற்படையின் ‘USS Anchorage’ ஆகிய கப்பல்கள் 2023 ஜனவரி 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதுடன், மேலும் இக் கப்பல்கள் 2023 ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில், நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்படை கட்டளைக் கடல் பகுதியில் பல கடற்படை பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தியது.
இந்த CARAT - 2023 இருதரப்புப் பயிற்சியின் கடல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து பங்குதாரர்களை விளக்கமளிப்பு 2023 ஜனவரி 20 ஆம் திகதி ‘USS Anchorage’ கப்பலில் நடைபெற்றதுடன் அங்கு கடல் கட்டத்தில் பங்கேற்கும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், ‘USS Anchorage’ கப்பலுடன் இணைக்கப்பட்ட விமானிகள் மற்றும் இலங்கை விமானப்படையின் விமானிகள் குறித்த பயிற்சியின் போது செய்திகளை பரிமாறிக்கொள்ளும் முறைகள், பாதுகாப்பு வகைப்பாடு உட்பட நிலையான நடைமுறைகள் பற்றிய தொழில்முறை அறிவு பரிமாறிக் கொண்டனர்.
இதன்படி, 2023 ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நீர்கொழும்புக்கு அப்பால் மேற்குக் கடல் பகுதியில், இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு, இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Anchorage’ ஆகிய கப்பல்கள் போர் சூழ்நிலையில் போர்க்கப்பல்களை தந்திரோபாய கோடு அமைப்புகளில் நகர்த்துவதற்கான பயிற்சிகள் (Divisional Tactics - DIVTACs) கப்பல்கள் மற்றும் படகுகள் சென்று கொண்டிருக்கும் போது அவற்றை ஆய்வு செய்யும் நோக்கத்திற்காக உள்ளே நுழைவதற்கான தேடல் மற்றும் கைப்பற்றுதல் பயிற்சிகள் (Visit Board Search & Seizure - VBSS), கப்பல்களுக்கு இடையே கடலில் பொருட்களை பரிமாறிக்கொள்ள கப்பல்களை தயார் செய்தல் (Replenishment at Sea - RAS), வான்வழி செயல்பாடுகள் (Overhead Reconnaissance), பகல் மற்றும் இரவு துப்பாக்கி சூடு பயிற்சிகள்(Gunnery Exercises-GUNEX) ஆகியவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மேலும், ‘USS Anchorage’ கப்பலுடன் இணைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம், CARAT - 2023 பயிற்சியின் கடல் கட்டத்தில் பங்கேற்ற கப்பல்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் பணியாளர்கள் பரிமாற்ற பயிற்சிகளை மேற்கொண்டன, அத்துடன் கப்பல்கள் மற்றும் கப்பல்களை அணுகுவதற்கான தேடல் மற்றும் கைது பயிற்சிகள். ஹெலிகாப்டர்கள் மூலம் (Helicopter Visit, Board, Search and Seizure - HVBSS) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மேலும், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி கப்பல்கள் மற்றும் கப்பல்களை அணுகுவதைத் தேடுதல் மற்றும் கைது செய்தல் தொடர்பான பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவு மற்றும் அனுபவங்கள் எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பொதுவான சவால்களை இலங்கை கடற்படைக்கு கூட்டாக சமாளிக்க உதவும். நாட்டின் கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து, நிலையான கடல் பிராந்தியத்தை உருவாக்க பெரும் உதவியாக இருக்கும்.