CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப் பயிற்சிகள் தொடங்கியது
CARAT– 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மரைன் பயிற்சி (Marine Exercise - MAREX) 2023 ஜனவரி 21 ஆம் திகதி அமெரிக்க மரைன் படைப்பிரிவு, இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு, கடற்படை சிறப்பு படகுகள் படையணி, கடற்படை விரைவு அதிரடி கைவினைப் படையணி மற்றும் கடற்படை காலாட்படையணி ஆகியவை இணைந்து முள்ளிக்குளத்தில் தொடங்கியதுடன் அதன் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப் பயிற்சிகள் (Humanitarian Assistance & Disaster Relief) இன்று (2023 ஜனவரி 22) வடமேற்கு கடற்படைக் கட்டளையின் முள்ளிக்குளம் கடற்கரையில் நடைபெற்றது.
அனர்த்தம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மனிதாபிமான உதவி வாகனங்கள் மற்றும் பணியாளர்களை கடல் வழியாக தரைக்கு கொண்டு வரும் இந்த பயிற்சி அமெரிக்க கடற்படையின் Landing Craft Air Cushion (LCAC) வகையின் 02 கப்பல்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய பயிற்சிகளுக்கான தத்துவார்த்த மற்றும் நடைமுறைத் தேவைகள் இலங்கை கடற்படைக்கு வழங்குவதும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப் பயிற்சிகள் தொடர்பான அறிவைப் பகிர்ந்து கொல்வதும் இந்த பயிற்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் உட்பட கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந் நிகழ்வை மேற்பார்வையில் கலந்துகொண்டனர்.