CARAT - 2023 இருதரப்பு பயிற்சியின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற மரைன் பயிற்சி முள்ளிகுளத்தில் ஆரம்பமானது

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல்கள் குழுவினால் நடத்தப்படுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான, CARAT– 2023 இருதரப்பு பயிற்சியின் மரைன் பயிற்சி (Marine Exercise - MAREX) இன்று (2023 ஜனவரி 21) இலங்கை கடற்படை கப்பல் பரண நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் சஞ்சீவ கொடிகார மற்றும் அமெரிக்க நான்காவது மரைன் படைப்பிரிவின் இரண்டாம் படையணியின் கட்டளை அதிகாரி கேப்டன் ஷான் மந்த்ராயர் (Captain Shan Mandrayar) ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

அதன்படி, இன்று (21 ஜனவரி 2023) இருதரப்புப் பயிற்சியான CARAT- 2023 இன் தரைச் செயல்பாடுகளைத் தொடங்கி, போர்ச் சூழ்நிலையில் காயமடைந்தவர்களுக்கு வசதிகள் வழங்கள், (Tactical Combat Casualty care - TCCC), காம்பாட் லைஃப் சேவிங் (Combat Life Saving - CLS), போர் சூழ்நிலையின் போது காட்டில் போர் மற்றும் நகர்ப்புற போர், நகர்ப்புற நிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கை - (Military Operation in Urban Terrain – MOUT & Rescue Operation), ஆகிய இந்த நடைமுறை பயிற்சிகளை இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு, கடற்படை சிறப்பு கப்பல் படை, கடற்படை விரைவு நடவடிக்கை கப்பல் படை, கடல் காலாட்படை பிரிவு மற்றும் அமெரிக்க மரைன் படைப்பிரிவு இணைந்து மேற்கொண்டன.