இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் (Captain Vikas Sood) இன்று (2023 ஜனவரி 09) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், 25 வது கடற்படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின், பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.