கடற்படையினரின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் காரைநகரில் நடைபெற்ற 03வது உயிர்காக்கும் பயிற்சி நெறியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை உயிர்காக்கும் சங்கம், நார்த்விண்ட் திட்ட நிறுவனம் இணைந்து யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நடத்திய மூன்றாவது (03) உயிர்காக்கும் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு (08) இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் பிரியால் விதானகேவின் தலைமையில் 2023 ஜனவரி 06 ஆம் திகதி காரைநகர் ஃபோர்ட் ஹம்மன்ஹில் உணவகத்தில் நடைபெற்றது.

தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக இருந்த காலத்தில் அவருடைய கருத்தின் அடிப்படையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சமூக அக்கறையுடன் இந்த உயிர்காக்கும் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் முதலாம் மற்றும் இரண்டாவது உயிர்காப்புப் பயிற்சி வகுப்புகள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்களாக கடற்படையின் விரைவான பதில் மற்றும் மீட்புப் பிரிவின் பங்களிப்புடன் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலாரவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் அவர்களின் மேற்பார்வையின் கீழ், இலங்கை உயிர்காப்பு சங்கம் மற்றும் நார்த்விண்ட் திட்ட நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கடற்படையின் உடனடி பதில் மற்றும் மீட்புப் பிரிவின் பங்களிப்புடன் 2022 டிசம்பர் 14 ஆம் திகதி முதல் மூன்று வாரங்களாக யாழ்ப்பாணப் பகுதி இளைஞர்களுக்காக இந்த பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மூன்றாவது (03) உயிர்காக்கும் பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த எட்டு (08) இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் பிரியால் விதானகேவின் தலைமையில் 2023 ஜனவரி 06 ஆம் திகதி காரைநகர் ஃபோர்ட் ஹம்மன்ஹில் உணவகத்தில் நடைபெற்றது.

மேலும், இந் இந்நிகழ்வில் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் நலிந்த குமார, வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் செயலாளர் திரு.சமீர ஜீவந்த, நார்த்விண்ட் திட்டத்தின் பிரதிநிதி ஜெகன் அருளையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.