புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 19) இடம்பெற்றது.
இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கை கடற்படையின் 25ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர், நாட்டின் கடல் வலயத்தில் நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து கடல் வலயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை வரிசையாக மேற்கொள்ளும் தேசிய அபிலாஷையை அடைவதற்காக கடற்படையின் பணி மற்றும் பங்களிப்பை நிறைவேற்றுவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இடையே கருத்துப் பரிமாற்றப்பட்டது.
இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.