இலங்கை கடற்படை கலாசார இசைப் பிரிவின் நடன மற்றும் தாள வாத்தியம் இசை நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது
இலங்கை கடற்படையின் கலாசார இசைக்குழுவினால் வழங்கப்பட்ட வண்ணமயமான நடன மற்றும் தாள வாத்திய நிகழ்ச்சி 2022 நவம்பர் 29 ஆம் திகதி கொழும்பு 07, ராயல் மாஸ் எரீனா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் இரண்டு சிரேஷ்ட கலைஞர்களான திரு.சந்தன விக்கிரமசிங்க மற்றும் திரு.ரவிபந்து வித்யாபதி ஆகியோர் தலைமையில் இலங்கை கடற்படை கலாசார இசைக்குழுவின் கடற்படை வீரர்களுக்கு 06 மாதங்களாக நடனம் மற்றும் தாள வாத்தியம் பற்றிய பாடநெறியொன்று நடத்தப்பட்டது. அதன்படி, பயிற்சி நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில் மற்றும் கடற்படை வீரர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடனம் மற்றும் தாள வாத்தியம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 11 வண்ணமயமான நடனம் மற்றும் தாள வாத்தியம் உள்ளடக்கிய கடற்படை கலாசார இசைக்குழுவின் இந்த இசை நிகழ்ச்சி கடற்படை வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது.
இந் நிகழ்வுக்காக கடற்படை பிரதானி, ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட ஏனைய பணிப்பாளர் நாயகங்கள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உட்பட கட்டளைத் தளபதிகள், கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கொடி நிலை அதிகாரிகள், கடற்படை இசைக்குழுவின் சிரேஷ்ட இணைப்பாளர், கப்டன் பிரதீப் டவ்சன், பதில் பணிப்பாளர் இசை கேப்டன் அதுல தயாகீர்த்தி மற்றும் கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.