72 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது

2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2022 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் பெருமைக்குரிய 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் பல சமய நிகழ்வுகள் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமய நிகழ்ச்சிகள் தொடரின் ஆரம்பமாக, கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு ருவன்வெலி மஹா சேய அருகில் மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதிய அருகில் 2022 நவம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன், கிறிஸ்துவ சமய வழிபாடுகள் புனித லுசியா தேவாலயத்தில் நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. மேலும், கொழும்பு, வெலிசர கடற்படை வளாகத்தில் 2022 நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கவும், 2022 டிசம்பர் 01 ஆம் திகதி கொழும்பு, ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆழயத்தில் இந்து சமய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக குமாரவின் தலைமையில் இன்று (2022 டிசம்பர் 02) கொழும்பு கோட்டை செத்தம் தெரு ஜும்மா பள்ளிவாசலில் வணக்கத்திற்குரிய அம்ஹர் ஹகம்டீன் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய வழிபாடுகள் நடைபெற்றதுடன் இங்கு நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமாகிய மற்றும் தற்போது சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், முழு கடற்படையினருக்கும் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசிகள் வழங்கப்பட்டது.

இதன்போது, பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் நெவில் உபயசிறி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் கடற்படை மற்றும் விமானச் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் அசங்க ரணசூரிய, பணிப்பாளர் நாயகம் மரைன், கொமடோர் சனத் பிடிகல, இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் கெலும் மாரம்பகே உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்று கலந்துகொண்டது.